அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆனைமலையாறு, நல்லாறு அணை கட்ட வேண்டும்! பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Added : செப் 12, 2020
Share
Advertisement
 ஆனைமலையாறு, நல்லாறு அணை கட்ட வேண்டும்! பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில் உள்ள தனியார் மண்டபத்தில், பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட செயற்குழுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாநில தலைவர் முருகன் பங்கேற்று பேசுகையில், ''மத்திய அரசு சார்பில், 60 லட்சம் இலவச காஸ் இணைப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, ஆறாயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில், ரேஷன் கடையில் கூடுதல் அரிசி வழங்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில், பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி போன்றவைகளும் நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்,'' என்றார்.தீர்மானங்கள் வருமாறு:கொப்பரை தேங்காய்க்கு, ஆதார விலையை உயர்த்தி கொடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கேரள மாநிலத்தை போன்று, தமிழகத்திலும் மாநில அரசு நிதியிலிருந்து கொப்பரை கிலோவுக்கு, 25 ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும். பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வால்பாறை எஸ்டேட்டுகளில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.பொள்ளாச்சி, மதுக்கரை, கிணத்துக்கடவு பகுதியை சுற்றிலும் உள்ள தடுப்பணைகளை பராமரித்தும், கோதவாடி குளம் நீர்வழி பாதை சீரமைத்தும், மழைநீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெகமம் பகுதியில் நார் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளதால், தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும். பி.ஏ.பி., திட்டத்தில், நிலுவையில் உள்ள, ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பொள்ளாச்சி மேற்கு பகுதிகளான மேட்டுப்பாளையம், சூலக்கல், நாராயண செட்டிபாளையம், ஜமீன் காளியாபுரம் பகுதிகளுக்கு, பி.ஏ.பி., பாசனத்தை விரிவுபடுத்த வேண்டும்.இவையுள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், மாநில பொது செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராசலம், மாவட்ட பொது செயலாளர்கள் அப்பு, குமரேசன், ஆனந்த், மாநில சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X