மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு மனு

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுடில்லி:தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கானநிலுவையை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு, 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவை, 4,345 கோடி ரூபாயை வழங்கவில்லை. இது குறித்து, தமிழக அரசு, 2019ல் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.அதற்கு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு,பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, நிலுவை வழங்க முடியும் என, மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால், தேர்தல் நடந்து, பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க வேண்டும் என, 14வது நிதி ஆணையத்தின் விதிமுறைகளில் கூறப்படவில்லை. எனவே, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவையை உடனே வழங்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X