பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

வேடசந்துார் : அரசு பள்ளிகளில் 'ஆன்லைன்' வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மேல்நிலை மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை விரைந்து வழங்க வேண்டும்.

அரசு மேல்நிலை பள்ளிகளில் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிகள் திறந்த முதல் 3 மாதங்களுக்குள் மடிக்கணினி அரசால் வழங்கப்பட்டது. இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 24 ல் ஊரடங்கு அமலாகி, பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது. இதுவரை திறக்கவில்லை. இதனால் 'ஆன்லைன்' வகுப்புகள் நடக்கின்றன.இந்த வகுப்பில் பங்கேற்க மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு அலைபேசி அவசியம். இது இல்லாத மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கும் நிலை உள்ளது.


வேடசந்துார் பிளஸ் 1 மாணவர் கார்த்தி கூறியதாவது: ஆண்ட்ராய்டு அலைபேசி வாங்க முடியாததால் பாடங்களை கவனிக்க முடியவில்லை. படிக்க ஆர்வம் உள்ளோர் நலனுக்காக மடிக்கணினியையாவது விரைந்து வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X