சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனவரை தாக்கியவர் மீது வழக்கு

Added : செப் 12, 2020
Share
Advertisement

கடமலைக்குண்டு : மேகமலை வனச்சரகம் பொம்முராஜபுரம் தெற்கு மலைப்பகுதியில் வனவர் சரவணகுமார் தலைமையில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் இருந்தனர்.

அங்குவனத்துறை அனுமதி இன்றி காமன்கல்லூர் முருகன் 53, கூமாபட்டி காஞ்சாபுரத்தை சேர்ந்த பிச்சைமணி 35, மாடு மேய்த்து கொண்டு இருந்தனர். வனவர் அவர்களை கண்டித்து உள்ளார். அப்போது முருகனுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தாக்கப்பட்டதில் சரவண குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவர் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முருகனை மயிலாடும்பாறை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X