பொது செய்தி

தமிழ்நாடு

787 மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:கொள்ளை சம்பவத்தை தடுக்க, 'டாஸ்மாக்' நிறுவனம், இதுவரை, 787 மதுக் கடைகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,330 சில்லரை கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்பனை செய்கிறது. சமூக விரோதிகள், இரவில், மதுக் கடைகளை உடைத்து, பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளை அடித்துச் செல்கின்றனர்.இந்த செயல்களில் ஈடுபடும், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து, கொள்ளை சம்பவத்தை தடுக்க, அனைத்து மதுக் கடைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக, சென்னை மண்டலத்தில், 535; கோவை, 450; மதுரை, 755; சேலம், 565; திருச்சி மண்டலத்தில், 695 என, மொத்தம், 3,000 மதுக் கடைகளில், ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, கேமராக்கள் பொருத்தும் பணியை, டாஸ்மாக் நிறுவனம் ஜூலை முதல் துவக்கியது.தலா, ஒரு கடையில், இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தற்போது வரை, 787 கடைகளில், கேமராக்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. நவம்பர் மாதத்திற்குள் எஞ்சிய, 2,213 கடைகளிலும், கேமரா பொருத்தும் பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டு உள்ளது.கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர் மற்றும் தலைமை அலுவலகங்களில் இருந்தபடி கண்காணிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X