பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்புக்கு புதிய அறிவிப்பு: கிடப்பில் போட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்க கோரிக்கை

Added : செப் 12, 2020
Share
Advertisement

உடுமலை:விவசாய மின் இணைப்புக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பல ஆண்டுகளாக கிடப்பில், போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை, பரிசீலித்து, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கிணற்று பாசனத்தை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி நடக்கிறது. இதற்காக, விவசாய மின் இணைப்பு கேட்டு, சாதாரண, 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகை திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், விண்ணப்பங்களை விவசாயிகள், மின்வாரியத்திடம் சமர்ப்பிக்கின்றனர்.
முன்னுரிமை அடிப்படையில், ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில், சாதாரண வரிசை திட்டத்தில், மின் இணைப்பு பெற, 18 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்திலும், சராசரியாக, 10 ஆண்டுகள் கழித்தே மின் இணைப்பு கிடைக்கிறது.அவ்வகையில், சாதாரண வரிசையில், மார்ச், 31, 2003 ஆண்டு வரையிலும், 10 ஆயிரம் ரூபாய் திட்டத்தில், 2004, மார்ச்; 25 ஆயிரம் ரூபாய் திட்டத்தில், மார்ச் 2007; 50 ஆயிரம் ரூபாய் வைப்பு திட்டத்தில், 2009 மார்ச் வரையிலும், பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு, இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதிலும், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலை, நீலகிரியை உள்ளடக்கிய, கோவை மண்டலத்துக்கு, மொத்தமாக, 2,189 விண்ணப்பங்களுக்கு மட்டுமே, மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.உடுமலை, பொள்ளாச்சியை உள்ளடக்கிய, உடுமலை மின்பகிர்மான வட்டத்துக்கு, சாதாரண வரிசையில், 338; 10 ஆயிரம் திட்டத்தில், 14, 25 ஆயிரம் திட்டத்தில், 5; 50 ஆயிரம் ரூபாய் திட்டத்தில், 110 இணைப்பு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, பல ஆண்டுகள் காத்திருந்து, அறிவிப்பு வெளியானாலும், இனியும் பணிகள் துவங்கவில்லை.
விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் மட்டும், மின் இணைப்புக்காக, 1,500 க்கும் அதிகமான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.முன்னுரிமை அடிப்படையில், பட்டியல் வெளியிட்டாலும், டிரான்ஸ்பார்மரில் 'லோடு' இல்லை உட்பட காரணங்களை தெரிவித்து, விவசாயிகளை இழுத்தடிக்கின்றனர்.விவசாய மின் இணைப்புக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் தமிழக அரசு, பல ஆண்டுகளாக கிடப்பில், போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X