பொது செய்தி

தமிழ்நாடு

புது ரேஷன் கார்டு விண்ணப்பம்: நிராகரிக்க கூடாது என உத்தரவு

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:'புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆவணங்கள் சரியில்லை என்ற காரணத்தை கூறி, விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது' என, உணவு வழங்கல் துறையை, மாநில உணவு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம்.ஆய்வுஇதற்கு, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, 'ஆதார்' எண், முகவரி சான்றுக்கான ஆவணம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவற்றை அதிகாரிகள், இணையதளம் வாயிலாக சரிபார்ப்பதுடன், வீடுகளுக்கு வந்து, தனி சமையல் அறை இருப்பதை உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்குவர்.சமீப காலமாக, ரேஷன் கார்டு விண்ணப்பங்களை, சரியாக ஆய்வு செய்யாமல், அதிகாரிகள் நிராகரிக்கின்றனர். இதனால், ஏழைகள், ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'ரேஷன் கார்டு தொடர்பான, ஆவணங்கள் பதிவேற்றம் சரியில்லை; ஆவணங்களில் உள்ள விபரம் தெளிவில்லை' உள்ளிட்ட காரணங்களை கூறி, ரேஷன் கார்டு விண்ணப்பங்களை, அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.


வலியுறுத்தல்



புதிய கார்டு, பெயர் நீக்கல் உள்ளிட்ட ரேஷன் கார்டு சேவைகளுக்கு, ஒரு முறை இணைய தளத்தில் பதிவு செய்து தர, 'பிரவுசிங் சென்டர்' நடத்துவோர், 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். விண்ணப்பங்களை நிராகரிப்பதால், ஏழைகள்,மீண்டும் விண்ணப்பிக்க செலவு செய்ய நேரிடுகிறது. இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள, மாநில உணவு ஆணையத்திற்கு, அதிக புகார்கள் சென்றுள்ளன. அதனால், விண்ணப்பத்தில் ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி, அதை நிராகரிக்காமல், விண்ணப்பதாரரை தொடர்பு கொண்டு பேசுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆவணங்களை நேரில் எடுத்து வர சொல்லி அல்லது அதிகாரிகள் நேரில் சென்று, ஆய்வு செய்து, ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, உணவு வழங்கல் துறையை, மாநில உணவு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
12-செப்-202008:56:23 IST Report Abuse
Ramachandran Rajagopal லஞ்சம் கொடுத்தால் ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேலான ரேஷன் கார்டுகள் வழங்குவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X