பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்பாடு

Added : செப் 12, 2020
Share
Advertisement

ரத்தசோகை உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு குடற்புழுக்கள் தான் முக்கிய காரணம். குழந்தைகளுக்கு குடற்புழு பிரச்னையால் உடல், மன வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, பசியின்மை வயிற்று வலி, கர்ப்ப காலத்தில் ரத்தச் சோகை மற்றும் பிரசவத்தின் போதும் சிக்கல் ஏற்படும்.காலணி அணியாமல் கழிப்பறைக்கு செல்வது, திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது போன்ற சுகாதார மற்ற செயல்பாடுகளால் குடற்புழுக்கள் உருவாகின்றன.இருவார முகாம் ஏற்பாடுகுடற்புழு பாதிப்பு நாள்பட்ட பிரச்னை வகையை சேர்ந்தது. பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குடற்புழு பிரச்னை அதிகம் ஏற்படும் என்பதால் மத்திய அரசு இலவசமாக மாத்திரையை (அல்பெண்டசோல்) வழங்குகிறது.திண்டுக்கல் சுகாதாரத்துறை மாவட்டத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 191, பழநி மாவட்டத்தில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 825 என மொத்தம் 6 லட்சத்து 58 ஆயிரத்து 16 பேருக்கு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதற்காக, செப்.14 முதல் 28 வரை, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி உட்பட 2000 பேர் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X