பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் புதிய கண்காணிப்பு கேமரா

Added : செப் 12, 2020
Share
Advertisement
 மாவட்ட எல்லையில் புதிய கண்காணிப்பு கேமரா

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள, திருப்பூர் மாவட்ட எல்லையில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் பகுதி, திருப்பூர் மாவட்டத்தின் எல்லை கிராமமாக உள்ளது. இதற்கு அருகில், சில நுாறு மீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்டம் துவங்குகிறது. தேசியநெடுஞ்சாலையில் மடத்துக்குளம் மற்றும் வயலுார் ஆகிய இடங்களில் செக்போஸ்ட் உள்ளது.இதைத்தவிர்த்து, மாற்றுப்பாதையில் செல்ல விரும்பும் சிலர், வயலுார் வழியாக கடத்துார் வழித்தடத்தில் கணியூர் சென்று, மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து கொள்ள முடியும். இந்த அமைப்பில் கிராமபகுதி ரோடுகள் உள்ளன. இது போன்று, மாற்று வழித்தடத்தை பயன்படுத்தும் நபர்களை கண்காணிக்க, கடத்துார் அருகே மாவட்ட எல்லையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் கடந்த 6ம் தேதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் கண்காணிப்பு வளையத்தில் இடைவெளி ஏற்பட்டது. இதை சரிசெய்ய உடைக்கப்பட்ட கேமராவுக்கு மாற்றாக, இரண்டு புதிய கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X