பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' வினாடி-வினா போட்டி

Added : செப் 12, 2020
Share
Advertisement

உடுமலை:சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி, கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில், இணைய வழி வினாடி-வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஓசோன் தினம், செப்., 16 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இணைய வழியில், வினாடி-வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் கீழ் செயல்படும், விஞ்யான் பிரசார் நிறுவனம் மற்றும் தெற்காசிய வானிலை நிறுவனம், இந்திய வானிலை ஆய்வு சங்கம் இணைந்து, இத்தினத்தையொட்டி, இப்போட்டியை அறிவித்துள்ளனர்.எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு, இப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது.பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க, செப்., 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். https://vvm.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.மேலும், போட்டியில் பங்கேற்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை, 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X