பொது செய்தி

தமிழ்நாடு

அறிகுறி இல்லாதவர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியானவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆறாயிரம் பேர் குணமாகியுள்ளனர். தினமும் புதிதாக 100 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் 70 சதவீதம் பேர், எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்றுக்கு ஆளாகின்றனர். தற்போது அறிகுறி இன்றி தொற்று உறுதியானவர்கள் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 143 பேர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது. டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பர். 14 நாட்களுக்கு பின் எந்த அறிகுறியும் இல்லையெனில் குணமானவராக கருதப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X