பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளிதோறும் மாணவர்களுக்கு பயிற்சித்தேர்வு: கல்வித்துறை அறிவுறுத்தல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

உடுமலை;உடுமலை கல்வி மாவட்டத்தில் வெள்ளிதோறும், மாணவர்களுக்கு 'ஆன்லைனில்' பயிற்சி தேர்வுகள் நடத்தி வருகின்றனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசின் உத்தரவுப்படி, துவக்கம் முதல் மேல்நிலை வரை, மாணவர்கள், வீட்டிலிருந்து, 'ஆன்லைன்' மூலமாக அல்லது 'டிவி'யில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் படிப்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அட்டவணை வடிவமைப்பு, 'ஆன்லைன்' வகுப்புகளும் நடத்துகின்றனர்.துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்புகளில், மாணவர்களுக்கு, பாடம் தொடர்பான, வீட்டுப்பாடங்கள் வழங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், ஆசிரியர்கள் 'வாட்ஸ் ஆப்' மூலமாக பாடங்களை வழங்குகின்றனர். அடுத்தகட்டமாக, துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள வகுப்புகளுக்கு, வீட்டுப்பாடம் மட்டுமின்றி, மாணவர்களுக்கு பயிற்சித்தேர்வு வழங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், பயிற்சித்தேர்வுகள் குறித்து, வெள்ளிக்கிழமை தோறும் 'ஆன்லைன்' மூலமாக வினாக்களை அனுப்புகின்றனர்.மாணவர்களின் விடைத்தாள்களை, மீண்டும் வாட்ஸ் ஆப் அல்லது வேறு செயலிகள் மூலம் சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டதை, மொபைல் போன்களில் சேகரித்து வைக்கவும், கல்வித்துறை கேட்கும் சமயத்தில் அதனை சமர்ப்பிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, இதே முறையில் தேர்வு நடத்துவதோடு, பள்ளிக்கு அருகிலுள்ள குழந்தைகளின் பெற்றோர் மூலம் மாணவர்களின் பயிற்சித்தாள்களை, பள்ளியில் சமர்ப்பிக்கவும் செய்து வருகின்றனர்.உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில், மாணவர்களை தொடர்பு கொண்டு, தேர்வு நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X