பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூர் பஸ்கள் உள்ளூரில் நிற்கும் ஏற்ற மறுத்தால் புகார் கொடுக்கலாம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயங்கும் பஸ்களை, வழித்தடத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தலாம், என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா ஊரடங்குக்கு பின், கடந்த, 1ம் தேதி முதல் மாவட்ட எல்லைக்குள் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. கடந்த, 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.பொள்ளாச்சியை பொருத்த வரை, டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகக்குறைவாக இருப்பதால், குறிப்பிட்ட வழித்தடங்களில், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே டவுன் பஸ்கள் இயங்குகின்றன. இதனால், பஸ்களை நம்பி இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கு தீர்வாக, கோவை, உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் இயங்கும் வெளியூர் பஸ்களையும், டவுன் பஸ் போன்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என, போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.வெளியூர் பஸ்கள் இயங்கும் வழித்தடத்தில், பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பயணிகள் நிறுத்த வேண்டுமென, 'சைகை' காண்பித்தால், அவர்களை நிறுத்தி ஏற்றி வர வேண்டும் என, பஸ் ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.பயணிகள் எந்த பஸ் ஸ்டாப்பில் வேண்டாலும் ஏறலாம். தேவைப்படும் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக்கொள்ளலாம். ஏற்றவும், இறக்கி விடவும் மறுக்கப்பட்டால், பஸ்சின் எண்ணுடன், பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் புகார் அளிக்கலாம், என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X