பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை பழ பண்ணைகள் ரூ.50 லட்சத்தில் புதுப்பொலிவு

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 40 பழ பண்ணைகளை மேம்படுத்த, அரசு, 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கல்லாறு; கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனுார்; தென்காசி மாவட்டம், குற்றாலம்; புதுக்கோட்டை மாவட்டம், வலத்திராகோட்டை; சேலம் மாவட்டம், கருமன்துறை, மலியார்குன்றம், உள்ளிட்ட, 40 இடங்களில், தோட்டக்கலை துறைக்கு பழ பண்ணைகள் உள்ளன. இங்கு, மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லிக்காய், பேரிக்காய், பேஷன் புரூட், மங்குஸ்தான், பட்டர் புரூட் உள்ளிட்ட, பலவகை பழங்கள் விளைகின்றன.

சீசன் காலங்களில், இங்கு உற்பத்தியாகும் பழங்கள், விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும், ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. பழ பண்ணைகளை மேம்படுத்தினால், அவற்றின் வாயிலாக, உற்பத்தியை அதிகரிக்க முடியும். இப்பணிகளை செய்ய, அரசிடம் நிதி கேட்கப்பட்டு இருந்தது. தற்போது, 50 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், பழ பண்ணைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

காலி நிலங்களில், புதிதாக பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இங்குள்ள பழ மரங்களுக்கு தேவையான நீர் வழங்குதல், இயற்கை உரங்கள் தெளித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் வாயிலாக, வரும் நாட்களில் பழ பண்ணைகளில், மகசூல் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இங்கு உற்பத்தியாகும் பழங்களை, 'டான்ஹோடா' விற்பனைநிலையம் வாயிலாக, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X