சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறைகிறது கொரோனா பாதிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

தேனி, : மாவட்டத்தில் கொரோனா குணமடைந்து 99 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று தேனி சுப்பன் தெரு 54 வயது ஆண், பிள்ளையார் கோயில் தெரு 50 வயது பெண், ரத்தினம் நகர் 42 வயது பெண், எடமால் தெரு 50 வயது பெண், பொம்மையகவுண்டன்பட்டி 64வயது முதியவர் பாதிக்கப்பட்டனர்.கம்பம் சி.புதுப்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுமி, 54, 34 வயது ஆண்கள், பெரியகுளம் வடகரை 31 வயது பெண், 37 வயது ஆண், 4வயது சிறுவன், போடி அம்மாகுளம் 70 வயது முதியவர், சின்னமனுார் கோகுலம் காலனி29 வயது ஆண், 2 வயது சிறுமி பாதிக்கப்பட்டனர்.

ராயப்பன்பட்டி 56 வயது ஆண் எஸ்.ஐ., அல்லிநகரம் 58 வயது சிறப்பு எஸ்.ஐ., ரங்கசமுத்திரம் ஊராட்சி துணைத்தலைவர் 53 வயது ஆண் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 85 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 738 பேருக்கு பரிசோதனைக்காக உமிழ்நீர், சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.* இடுக்கி மாவட்டத்தில் 39 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ் ' செய்யப்பட்டனர். புதிதாக 28 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X