சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் படம் வைப்பதில் கட்சியினர் மோதல்

Added : செப் 12, 2020
Share
Advertisement
 முதல்வர் படம் வைப்பதில் கட்சியினர் மோதல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த கன்னிமுத்து தலைவராக உள்ளார். இதனால், ஊராட்சி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை வைத்திருந்தார். தற்போதைய முதல்வர் பழனிசாமி படம் இடம்பெறவில்லை.இதனால், ஊராட்சி அலுவலகங்களில் முதல்வர் பழனிசாமி படத்தை வைக்க வேண்டும் என்ற மரபு கடைப்பிடிக்கவில்லை என, ஊராட்சி செயலரிடம் அ.தி.மு.க.,வினர் முறையிட்டும் படம் வைக்கவில்லை.இதையடுத்து, அ.தி.மு.க., கிளைச் செயலாளர் சண்முகவடிவேல் மற்றும் கட்சியினர், நேற்று காலை ஊராட்சி அலுவலகத்துக்குள் சென்று, கருணாநிதி படத்தை அகற்றி விட்டு, முதல்வர் பழனிசாமி படத்தை வைக்க முயன்றனர்.அப்போது, அங்கிருந்த ஊராட்சி தலைவர் கன்னிமுத்து தலைமையிலான தி.மு.க.,வினர் அதை தடுக்க முயன்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.தலைவரின் அறையில், விருப்பப்பட்ட அரசியல் தலைவரின் படத்தை வைத்துக்கொள்ள உரிமை உள்ளது. இதில், யாரும் தலையிட முடியாது. அலுவலக கூட்ட அரங்கில் வேண்டுமானால், தற்போதைய முதல்வர் படத்தை வைத்துக்கொள்ளுங்கள் என, தி.மு.க.,வினர் தெரிவித்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த ஆனைமலை போலீசார், தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) பாலு ஆகியோர் பேச்சு நடத்தினர். இதையடுத்து, முதல்வர் பழனிசாமி படம் அலுவலக சுவரில் பொருத்தப்பட்டது. ஆனால், தலைவர் அறையில் இருந்த கருணாநிதி படத்தை அகற்றவில்லை. கருணாநிதி படத்தை அகற்ற, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். 'நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X