சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை: இருவர் கைது

Added : செப் 12, 2020
Share
Advertisement
 கஞ்சா விற்பனை: இருவர் கைது

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி - கொள்ளுப்பாளையம் ரோட்டில், அணைக்கட்டு பகுதியில் மாணவர்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோமங்கலம் எஸ்.ஐ., மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்த போது, அங்கு வந்த இருவரிடம் விசாரித்தனர்.விசாரணையில், பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நேருவீதியை சேர்ந்த மனோஜ்குமார், 29, மரப்பேட்டையை சேர்ந்த பாண்டியன் என்கிற மதுரை பாண்டியன், 40 என்பதும்; எஸ். சந்திராபுரத்தில் இருந்து வாங்கி வந்து கஞ்சா விற்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட இருவரும், ஏற்கனவே, திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக தெரிகிறது. இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படும் எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி, 65, என்பவரை தேடுகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X