பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை

Added : செப் 12, 2020
Share
Advertisement
 உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை

உடுமலை:வனத்துறையில் பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.வனத்துறையில் பணியின் போது உயிர்நீத்த வனப்பணியாளர்களின் வீர, தீர செயல்களுக்கு ஆண்டு தோறும் செப்.,11ல், மரியாதை செலுத்தப்படும். திருப்பூர் வனக்கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்தில் பணியாற்றிய, வனக்காவலர் சந்துரு, கடந்த, மே 9ம் தேதி, காண்டூர் கால்வாயில் அடித்து வரப்பட்ட ஆண் யானையை மீட்கும் முயற்சியில், எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார்.இத்தினமான நேற்று, மாவட்ட வன அலுவலகத்தில், அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப் தலைமை வகித்தார். சந்துரு படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டதோடு, நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்ந்து 4 மாதத்திலேயே, வன உயிரினத்தை மீட்க போராடி, உயிர் நீத்த சந்துருவின் வீரச்செயல் குறித்து பேசினர்.இதில், ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் கணேஷ்ராம் மற்றும் வனச்சரக அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X