பொது செய்தி

தமிழ்நாடு

புதிய 'பயோமெட்ரிக்' இயந்திரம் கைரேகை வச்சாதான் பொருள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 245 ரேஷன் கடைகளில் பயன்படுத்தும், 'பயோமெட்ரிக்' வசதியுடன் கூடிய 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் இன்று வழங்கப்படுகிறது. இனிமேல், குடும்ப உறுப்பினர் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.ரேஷன் பொருள் வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில், கைரேகை பதிவு கட்டாயமாக உள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர் ஒருவர் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே, இனி, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம் என்ற திட்டத்திற்கும், 'பயோமெட்ரிக்' பதிவு அவசியம்.அதற்காக, 'பயோமெட்ரிக்' வசதியுடன் கூடிய, புதிய 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 1,135 ரேஷன் கடைகளில் இம்முறை அமல்படுத்தப்படுகிறது. இதில், உடுமலை தாலுகாவிலுள்ள, 183 ரேஷன் கடைகள் மற்றும் மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 63 கடைகளுக்கு, புதிய 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் இன்று வழங்கப்படுகிறது.இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:கைரேகை பதியும், 'பயோமெட்ரிக்' வசதியுடன் கூடிய, புதிய 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வந்துள்ளன. அவை, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்படும். உயர் அதிகாரிகள் அறிவுரை அடிப்படையில், நடைமுறைக்கு வரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X