சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செந்நாய்கள் பலி: தனிப்படை விசாரணை

Added : செப் 12, 2020
Share
Advertisement

கூடலுார்:மசினகுடி அருகே, செந்நாய்கள் விஷத்தில் இறந்தது குறித்து, வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.முதுமலை, மசினகுடி சிங்காரா வனச்சரகம் பொக்காபுரம், விபூதிமலை அருகே இரு நாட்களுக்கு முன், நான்கு செந்நாய்களும்; நேற்று முன்தினம் ஆச்சக்கரை பகுதியில் ஒரு செந்நாயும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.'இறந்த செந்நாய்கள் உட்கொண்ட மானின் இறைச்சியில் விஷம் கலந்து இருக்கலாம்,' என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், வனத்துறையினர் ஐந்து குழுக்களாகப் பிரிந்து, வனப்பகுதியின் பிற இடங்களில், மேலும் செந்நாய்கள் இறந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''இறந்த ஐந்து செந்நாய்களும் ஒரே புள்ளி மான் இறைச்சியை உண்டுள்ளன. அதன் உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. செந்நாய்கள் வேட்டையாடி உண்ட மானின் உடலில், விஷம் இருக்க வாய்ப்புள்ளதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிக்குழு அமைத்து விசாரித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X