சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகரில் சுற்றி திரியும் குதிரைகள்: ரூ. 50 ஆயிரம் அபராதம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டியில், பந்தய குதிரைகள் நகரில் சுற்றி திரிவது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என, கலெக்டர் தெரிவித்தார்ஊட்டி நகரில் சுற்றித் திரியும் கால்நடை, குதிரைகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பொது இடங்களில் குதிரைகளின் நடமாட்டத்தை தடுக்க, குதிரைகளின் உரிமையாளர்களை அழைத்து, கணக்கெடுப்பு நடத்தி, நகராட்சி சார்பில் 'டோக்கன்' வழங்கப்பட்டது. 'விதி மீறி நகரில் சுற்றும் குதிரைகளை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு,10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற பந்தய குதிரைகளை, சுற்றுலா பயணிகள் சவாரி செய்யும் வகையில், பலர் ஈடுபடுத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும், குதிரைகள் தெருக்களில் சுற்றுவதால், பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''ஓய்வுபெற்ற பந்தய குதிரைகளை பராமரிக்கும், உரிமையாளர்கள், அவைகளை சாலைகளில் சுற்றி திரியவிட்டால், சம்பந்தப்பட்ட குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவற்றை சவாரிக்கும் பயன்படுத்த கூடாது,'' என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X