பொது செய்தி

தமிழ்நாடு

நெரிசலில் பிதுங்கி வழியும் மார்க்கெட் பைபாஸ் ரோடு

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் வாகனங்களை நிரந்தரமாக நிறுத்தியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தாராபுரம் ரோட்டில் இருந்து பிரியும் மார்க்கெட் பைபாஸ் ரோடு நகருக்குள் குறுகலாக உள்ளது. இந்த ரோட்டில், நகரின் வடபகுதியில் விளையும் காய்கறிகளுடன் வாகனங்கள் வருகின்றன. கேரளாவுக்கு காய்கறிகளுடன் செல்லும் வாகனங்களும் இதே ரோட்டில்தான் பயணிக்கின்றன. இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளன.கடைகளின் முன் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது சில இடங்களில் நிரந்தரமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் வாகனநெரிசல் குறைந்தபாடில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் நீண்டநேரம் நகர முடியாமல் தவிக்கின்றனர். போலீசார் அடிக்கடி ரோந்து சென்று இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X