பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காத வருவாய்த்துறை

Added : செப் 12, 2020
Share
Advertisement

நிலக்கோட்டை : மட்டப்பாறையில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள ஆழ்துளை கிணறு பகுதியை, அளந்து தர ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தியும் வருவாய்த்துறையினர் தாமதிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மட்டப்பாறையில் மக்கள் பயன்பாட்டுக்காக 3 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் 3 கிராமங்களில் 600 குடும்பங்கள் பயன் அடைந்து வந்தன. தனியார் ஒருவர் ஆழ்துளை கிணறு தனது இடத்தில் அமைத்துள்ளதாகக் கூறி வேலி அமைத்து விட்டார். ஆழ்துளையை இயக்க முடியாதவாறு வேலி அமைத்து விட்டதால் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.ஒன்றிய அதிகாரிகள் ஆழ்துளை உள்ள இடத்தை அளவீடு செய்து வழங்கும்படி வருவாய்த் துறையிடம் 2 மாதங்களுக்கு முன் எழுத்து மூலம் வலியுறுத்தினர்.

ஆனால், இதுவரை இடத்தை அளக்க சர்வேயர்கள் வரவில்லை. வருவாய்துறையினர் அளந்து நிலப்பிரச்னையை முடித்தால் மட்டுமே ஆழ்துளையை இயக்கி தண்ணீர் வழங்க முடியும். நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் அளக்க உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X