பெண்கள் சத்தான உணவு உண்பது அவசியம்; ஊட்டச்சத்து மாத விழாவில் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பெண்கள் சத்தான உணவு உண்பது அவசியம்'; ஊட்டச்சத்து மாத விழாவில் வலியுறுத்தல்

Added : செப் 12, 2020
Share
 'பெண்கள் சத்தான உணவு  உண்பது அவசியம்'; ஊட்டச்சத்து மாத விழாவில் வலியுறுத்தல்

குன்னுார்:'பெண்கள் கட்டாயம் சத்தான உணவு உண்பது அவசியம்,' என வலியுறுத்தப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், 'போஷன் மா' எனும், ஊட்டச்சத்து பராமரிப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த, 1ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. இதில் குன்னுார் பஞ்சாயத்து யூனியன் அலுவலக அரங்கில், நேற்று ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக, பஞ்., யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் பங்கேற்று, அரசின் நலத்திட்டம் குறித்து பேசினர்.அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் உமாதேவி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் கண்ணம்மாள் பேசுகையில், ''பெண்கள் குடும்பத்திற்காக தினம், தினம் உழைக்கும் நிலையில், உடல் நலனை காப்பது அவசியம். அதற்காக பெண்கள் கட்டாயம் சத்தான உணவு உண்பது அவசியம்,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X