பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணியில் 112 மி.மீ., மழை நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்தது

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கன மழை தொடர்வதால், சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது; 38 அடியாக நீர் மட்டம் நேற்று உயர்ந்தது.கோவை மாநகராட்சி மேற்கு பகுதி மற்றும் வழியார கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமான, சிறுவாணி அணை பகுதியில், ஜூன், 3 முதல், தென்மேற்கு பருவ மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது.சில நாட்கள் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. கடந்த, 1ம் தேதி முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், மீண்டும் மழைப்பொழிவு காணப்படுவதால், கொஞ்சம் கொஞ்சமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 112 மி.மீ., மழை பதிவானதால், நீர் மட்டம், 38 அடியாக (மொத்த உயரம் - 50 அடி) அதிகரித்துள்ளது.கடந்தாண்டு இதே நாளில், 44 அடிக்கு நீர் இருப்பு இருந்திருக்கிறது. நடப்பாண்டு, 6 அடிக்கு நீர் குறைவாக இருக்கிறது. கடந்த ஆக., மாதம், 12 அடி தண்ணீரை கேரள அரசு திறந்து விடாமல் இருந்திருந்தால், இந்நேரம் அணை நிரம்பி வழிந்திருக்கும்.தற்போது பெய்து வரும் மழை இன்னும், 4 அல்லது, 5 நாட்கள் தொடர வாய்ப்பு இருக்கிறது; அணைகளில் நீர் மட்டம் மேலும் உயரலாம் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X