பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையை நம்பி விதைப்பு பணி தீவிரம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பழநி, : பழநி சுற்று வட்டார பகுதிகளில் பருவமழையை நம்பி எள், சோளம், மக்காச்சோளம் விதைப்புப்பணி துவங்கியுள்ளது.

செப்டம்பர் முதல் நவம்பர் வரை பருவ மழை ஆண்டு தோறும் பெய்யும். இந்த காலங்களில் மானாவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து மகசூல் பெறுவர். இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்கிறது.இதைப் பயன்படுத்தி பழநி ஆயக்குடி, அமரபூண்டி, ரூக்குவார்பட்டி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, நெய்க்காரபட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் மானாவாரி சாகுபடி துவங்கி நடந்து வருகிறது.நிலங்களை உழுது, அடியுரமிட்டு விதைப்பு பணிகளை செய்ய துவங்கியுள்ளனர்.

ஏர் கலப்பையில் உழுது கொண்டே, அதைத் தொடர்ந்து விதைகளை விதைத்துச் செல்கின்றனர். அக்டோபரில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது இப்பயிர்கள் நன்கு செழித்து வளரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X