கோர்ட் செய்தி

தமிழ்நாடு

யானையை சுட்டுக்கொன்ற  சகோதரர்கள் ஜாமினில் 'ரிலீஸ்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட, கண்டியூர் பகுதியில், பெண் யானை ஒன்று சடலமாக கிடந்தது. யானையின் உடலில் குண்டு பாய்ந்து காணப்பட்டது.வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கையில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி,63, சகோதரர் கிருஷணசாமி,61, ஆகியோர் யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரிந்தது.தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தியதால், யானையை சுட்டு கொன்றதாக வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தனர். இவர்கள் மீது, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X