பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையிலிருந்து அதிகாலை பஸ்களை இயக்க வலியுறுத்தல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

மானாமதுரை : மானாமதுரையிலிருந்து அதிகாலை வெளியூர்களுக்கு நகர மற்றும் புறநகர் பேருந்துகளை இயக்க வேண்டும்என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மானாமதுரையிலிருந்து அதிகாலை 4:00 மணி முதல் மதுரை,திருச்சி, மற்றும் நரிக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு கொரோனா தொற்றுக்கு முன் அனைத்து பஸ்களும் சென்று வந்தன.6 மாத காலமாகபோக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த 7ந் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. ஆனால் மானாமதுரையிலிருந்து அதிகாலை 4:30 மணிக்கு திருச்சிக்கு செல்லும் அரசு பஸ் இது நாள் வரை விடப்படவில்லை.

பயணி மாரி 44,கூறுகையில்,அடிக்கடி வேலை விஷயமாக திருச்சிக்கு சென்று வருவேன். தற்போது அனைத்து ஊர்களுக்கும் பஸ் இயக்கப்பட்டு வரும் நிலையில் மானாமதுரையிலி ருந்து திருச்சிக்கு பஸ் விடப்படாததால்ஏராளமானவர்கள்அதிகாலை பஸ்ஸ்டாண்டிற்கு வந்தும் பஸ்கள் வராததால்ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது.போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து பஸ்களையும் இயக்கநடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X