பொது செய்தி

தமிழ்நாடு

ராம்குமார் தற்கொலை வழக்கு சிறை அதிகாரிகளுக்கு 'சம்மன்'

Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:சுவாதி கொலை வழக்கில் கைதான, ராம்குமார் தற்கொலை வழக்கில் ஆஜராக, புழல் சிறை அதிகாரிகளுக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி; 2016ல், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைதானார்.இந்த சம்பவம், அப்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே ஆண்டில், சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், அங்கு மின்சார ஒயரை கடித்து, தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை பரமசிவம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வரும், 30ம் தேதி, சிறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஆணைய தலைவர் துரை ஜெயசந்திரன், புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து ஆகியோர் ஆஜராக, 'சம்மன்' அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
12-செப்-202013:18:57 IST Report Abuse
s.rajagopalan தங்கமான பிள்ளை .. அநியாயமாக கொன்றுவிட்டார்கள் .. மனித உரிமை ஆணையர் விரைவாக விசாரித்து அதிகாரீகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும். ஸ்வாதி கொலை செய்யப்படவில்லை .. தற்கொலை .. கொலை என்பதேல்லாம் 'செட் அப்'........... இப்படியும் சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம் நல்ல சட்டம் .. நல்ல நியாயம்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
12-செப்-202006:08:24 IST Report Abuse
natarajan s பாவம் ராம்குமார், யாரோ செய்த குற்றத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தரை , ( To save the gace of then C M ) இழுத்துவந்து , குற்றம் சுமத்தி, இது பொய் வழக்கு என்று தெரிந்துவிடுமோ என்று அந்த ஏழை வாலிபரை கொன்று தற்கொலை நாடகம் நடத்தி அவரது ஜோலியை முடித்து வழக்கை முடித்து விட்டார்கள். இதில் சம்பந்த பட்ட யாரும் நல்ல நிம்மதியான வாழ்க்கை வள மாட்டார்கள் . நமது நாட்டுக்கு எதற்கு இந்த மனித உரிமை கமிஷன் எல்லாம், எந்த தீர்வும் வரப்போவதில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X