சிவகங்கை : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலானஆசிரியர் தின போட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்களுக்கு நடத்தப்படவுள்ளது.
1 முதல் 5 ம் வகுப்பு வரை ஓவியப்போட்டி, தலைப்பு: நான் விரும்பும் பள்ளி.6முதல் 8 ம் வகுப்பு வரை கட்டுரைப்போட்டி: நான் படித்த புத்தகம். கதைப்போட்டி: நேசமிகு வகுப்பறை.9முதல் பிளஸ் 2 வரை கட்டுரைப்போட்டி: துரத்தியடிக்கும் தொழிற்கல்வி, கதைப்போட்டி: எனது கனவு ஆசிரியர்.க ல்லுாரி மாணவர்கள் கட்டுரைப்போட்டி: ஊரடங்கு கற்பித்த பாடங்கள், கதைப் போட்டி: மாற்றத்திற்கான அறிவியல்.ஆசிரியர்களுக்கான கட்டுரைப்போட்டி: தரமான கல்விக்கு தடைகளாவன, கதைப்போட்டி: மாற்று வகுப்பறைகள்.
பொது மக்களுக்கான கட்டுரைப்போட்டி: தாய்மொழிக்கல்வியின் தற்போதைய நிலை. கதைப்போட்டி: கல்வியும் சமூக மாற்றமும். பங்கேற்பவர்கள் ஒரு பிரிவுக்கு மட்டுமே படைப்புகளை அனுப்ப வேண்டும். படைப்புகள் செப்., 25க்குள் புலவர் கா.காளிராஜா, சிவகங்கை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 307 தமிழ்குடில், கொல்லங்குடி, அழகாபுரி அஞ்சல், சிவகங்கை மாவட்டம், 630 556, அலைபேசி 86672 91033.ப.சாஸ்தா சுந்தரம், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சிவகங்கை, அலைபேசி 99421 90845 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். முதல் 3 இடங்களைப்பெறும் படைப்புகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE