சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மாணவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கலில் குளறுபடி

Added : செப் 12, 2020
Share
Advertisement

சிவகங்கை, : தமிழகத்தில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்களுக்குமாதம் 10 முட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பல குளறுபடி நடந்து வருகிறது.சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் அவர்களுக்கு பொருட்களாக வழங்கப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தலா நாள் ஒன்றுக்கு 100 கிராம் அரிசி, பருப்பு 40 கிராம், 6முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தலா நாள் ஒன்றுக்கு 150 கிராம் அரிசி 56 கிராம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.3 மாதங்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மாதம் ஒன்றுக்கு மாணவர்களுக்கு தலா 10 முட்டைகள் வீதம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது 8 ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கும் 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கும் உணவுப் பொருட்கள், முட்டை வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது. முதல் வகுப்புக்கு செப்., 17 வரை பள்ளி சேர்க்கை ஆன் லைனில் நடந்து வருகிறது. முதல் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களின் விபரங்களை பெற்று அவர்களுக்கு உணவுப் பொருட்கள், முட்டை வழங்க சத்துணவு பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி சேர்க்கை முடியாமல் எப்படி மாணவர்கள் பட்டியல் பெற்று உணவுப் பொருள் வழங்க முடியும். தற்போது அனுமதிக்கப்பட்ட 90 நாட்களில் பள்ளி வேலை நாட்கள் 65 அந்த நாட்களுக்கு கணக்கிட்டு பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழப்பமான அறிவிப்புகளால் சத்துணவு பொறுப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X