பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை: கூடுதல் வார்டு துவக்கம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் வார்டு மற்றும் இலவசமாக வந்த ஜெனரேட்டரை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

சிவகங்கை பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா மற்றும் பிற வைரஸ் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பழைய கட்டடம் ஒன்று புனரமைக்கப்பட்டது.அந்த கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் காரைக்குடி பி.ஆர்., சொக்கலிங்கம் இலவசமாக வழங்கிய ரூ.16 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டரை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல், கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் மீனா, உதவி அலுவலர்கள் முகமதுரபி, மிதுன், ராமநாதபுரம் கூட்டுறவு அச்சக சங்க தலைவர் சசிக்குமார், இந்து அறநிலைய துறை தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X