கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி கல்வி இயக்குனர்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:கல்லுாரி கல்வி இயக்குனர் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கல்லுாரி கல்வி இயக்குனராக, டாக்டர் டி. பூரணசந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, 2020 ஆகஸ்ட், 14ல், உயர் கல்வித் துறை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் கீதா தாக்கல் செய்த மனு:

கல்லுாரி முதல்வர் அந்தஸ்தில், நான் சீனியராக இருப்பதால், கல்லுாரி கல்வி இயக்குனராக நியமனம் பெற, எனக்கு உரிமை உள்ளது. எனக்கு பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். காலியிடம் உருவாவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன், பட்டியல் தயாரித்திருக்க வேண்டும். அவ்வாறு உரிய நேரத்தில் பட்டியல் தயாரித்திருந்தால், நான் முதலாவதாக இருந்திருப்பேன்.

எனவே, கல்லுாரி கல்வி இயக்குனராக பூரணசந்திரன் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும். கல்லுாரி கல்வி இயக்குனராக, எனக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி, வி.பார்த்திபன் பிறப்பித்த உத்தரவு:கல்லுாரி கல்வி இயக்குனராக பூரணசந்திரனை நியமித்ததில், ஏதோ தவறு இருப்பது, ஆரம்ப நிலையில் தெரிகிறது. மனுதாரருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ளது. சிறப்பு பணிக்கான அதிகாரியாக, மனுதாரர் ஏன் நியமிக்கப்பட்டார்;

ஜூனியரான பூரணசந்திரன், கல்லுாரி கல்வி இயக்குன ராக ஏன் நியமிக்கப்பட்டார் என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை.எனவே, நியமனம் தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யும் படி, உயர் கல்வித் துறை மற்றும் கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. உயர் கல்வித் துறை உத்தரவுக்கு, தடை விதிக்கப்படுகிறது. மனுவுக்கு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, வரும், 2௨ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X