சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பால், பிஸ்கட் சாப்பிட்ட நான்கரை வயது சிறுமி பலி

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:பால், பிஸ்கட் உட்கொண்ட நான்கரை வயது சிறுமி, உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 30. இவரது நான்கரை வயது மகள் பவித்ரா. நேற்று முன்தினம் கணேசன் மற்றும் மனைவி இருவரும், வேலைக்கு சென்றனர். வீட்டில் பாட்டியுடன் இருந்த பவித்ரா, பால் மற்றும் பிஸ்கட் உட்கொண்டார். அதன் பின் துாங்கச் சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்த பெற்றோர், குழந்தை நீண்ட நேரமாக துாங்கிக் கொண்டு இருப்பதை அறிந்து எழுப்பினர். ஆனால், குழந்தை எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, பெற்றோர் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சாய்பாபா காலனி போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X