பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

போலீஸ்காரர் மரணம்மேலுார்: கல்லம்பட்டி மகாராஜன் 40, மேலவளவு போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர். சுதந்திர தினத்தன்று கொடிமரத்தில் நுாலை கட்ட ஏறிய போது தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு விடுப்பில் இருந்தார்.நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இவர் கல்லம்பட்டி, அரிட்டாபட்டி பகுதி நீர்நிலைகளில் ஏராளமான மரக்கன்றுகளை வளர்த்தவர்.

லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிந்தவர் என சக போலீசாரால் பாராட்டப்படுபவர். டூவீலர்கள் திருட்டு: 4 பேர் கைதுமதுரை: நகரில் டூவீலர் தொடர் திருட்டு தொடர்பாக துணை கமிஷனர் பழனிகுமார் உத்தரவுபடி செல்லுார் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, எஸ்.ஐ.,க்கள் ஸ்ரீதரன், மணபாலன், குணசேகரன், அபிமன்யு, கோட்டை முனியாண்டி, ஏட்டுக்கள் கருப்பையா, போஸ், போலீஸ்காரரர் விக்னேஷ் ஆகியோரை கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இக்குழு செல்லுாரைச் சேர்ந்த இரு சிறுவர்கள், உசிலம்பட்டி கொக்குளம் தீபக் 22, நடுமுதலைக்குளம் நவீன்குமார் 24, ஆகியோரை கைது செய்து 10 டூவீலர்களை மீட்டது.

கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டினார்.ஒருவர் பலிமேலுார்: நாவினிபட்டி கட்டட தொழிலாளி திருமலைதேவா 29. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் நாவினிபட்டி மந்தைக்கு சென்ற போது(ெஹல்மெட்அணியவில்லை) எதிரே வெள்ளிமலைபட்டி விவசாயி அதியான் 37, ஓட்டி வந்தடூவீலர் மோதியதில் திருமலைதேவா இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலிதிருப்பரங்குன்றம்: தோப்பூர் வீட்டு வசதி வாரிய காலனி மதியழகன் 50. டீ கடை நடத்தினார். நேற்றுமுன்தினம் இரவு மனைவியுடன் டூவீலரில் உறவினர் வீட்டிற்கு சென்றார் (ஹெல்மெட் அணியவில்லை).

தோப்பூர் அருகே நான்கு வழிச்சாலையில் விருது நகரிலிருந்து மதுரைக்கு சென்ற டூவீலர் மதியழகன் டூவீலரில் மோதியது. மதியழகன் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மனைவி காயங்களுடன் தப்பினார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.விடுதிகளில் விபச்சாரம்: 8பேர் கைதுவாடிப்பட்டி: இப்பகுதி தனியார் தங்கும் விடுதிகளில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு இன்ஸ் பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட8 பேரை கைது செய்தனர்.பசு மாடு திருடியவர் கைதுஉத்தப்பநாயக்கனுார்: மகாலிங்கபுரம் குழந்தைசாமி. தோட்டத்தில் இருந்த இவரது பசு மாட்டை தேனி ஆண்டிபட்டி தாலுகா மணியகாரன்பட்டி செல்வம் என்ற வேளாங்கண்ணி 38, திருடியதாக கைது செய்யபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X