அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:

தி.மு.க., பெயர் அளவிற்கு தான், பட்டியல் இனத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கட்சி பதவிகளில், பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக, நடக்காமல் இருந்திருந்தால், கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும்; சட்டைகள் கிழிந்திருக்கும்.

ரஜினி கட்சி துவக்கினாலும் அ.தி.மு.க.,வின் அடித்தளம் வலுவாக உள்ளதால், 2021ல், அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில், ஊழலே கொண்டு வந்ததே தி.மு.க., தான். சர்க்காரியா ஊழல், பூச்சி மருந்து ஊழல், விஞ்ஞான பேர ஊழல் என, ஊழலை நவீனமாக கொண்டு வந்ததும் தி.மு.க.,வே. ஊழல், கமிஷன், கரப்ஷன் என மூன்று, 'சி'யும், தி.மு.க.,வுக்கு தான் பொருந்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X