சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 550 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், ஒரே நாளில், 550 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை, 17 ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது.கோவை, அவிநாசி ரோடு மற்றும் ஆடீஸ் விதியில் உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்த, 56 வயது ஆண், 19 வயது பெண் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதியை சேர்ந்த 224 பேர், மேட்டுப்பாளையத்தில் 11 பேர், சூலுார், துடியலுாரில் தலா 17 பேர், பொள்ளாச்சி 14 பேர் என மொத்தம் 394 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 21,233 ஆக உயர்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, 343 ஆக உயர்ந்தது. 550 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது. தற்போது, 3,631 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X