பொது செய்தி

தமிழ்நாடு

காலாவதி காப்பீடு பாலிசிகளை நவ.30 க்குள் புதுப்பிக்கலாம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

மதுரை, : காலாவதியான தபால் காப்பீடு பாலிசிகளை நவ., 30க்குள் பாலிசிதார்கள் புதுப்பிக்கலாம் என விருதுநகர் கோட்ட தபால் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: தபால் துறை சார்பில் அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் குறைந்த தவணை, அதிக ஊக்கத்தொகையுடன் தபால் ஆயுள் காப்பீடு, கிராமிய தபால் ஆயுள் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பாலிசிதாரர்கள் சிலர் தொடர்ச்சியாக தவணை செலுத்தாததால் பாலிசிகள் காலாவதியாகின்றன.கடைசி தவணை செலுத்தி ஐந்தாண்டுகள் நிறைவடைந்து காலாவதியான பாலிசிகளை டிச., 1 முதல் புதுப்பிக்க இயலாது.

எனவே கடைசி வாய்ப்பாக இந்த பாலிசி களை பாலிசிதாரர்கள் அரசு டாக்டரிடம் உரிய உடல் நலச்சான்று பெற்று அருகிலுள்ள தபால் நிலையங்களில் நவ., 30க்குள் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து புதுப்பிக்கலாம்.அதற்கு பின் புதுப்பிக்காத பாலிசிகள் ரத்து செய்ததாக கருதப்படும். பாலிசி புதுப்பித்தல், உடல்நலச்சான்று விண்ணப்பங்கள் தபால் நிலையங்களில் கிடைக்கும், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X