மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு மனு

Added : செப் 12, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
 மத்திய அரசுக்கு எதிராக  தமிழக அரசு மனு

புதுடில்லி,: தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவையை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசு, 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவை, 4,345 கோடி ரூபாயை வழங்கவில்லை. இது குறித்து, தமிழக அரசு, 2019ல் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.


latest tamil news




அதற்கு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு,பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, நிலுவை வழங்க முடியும் என, மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தேர்தல் நடந்து, பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க வேண்டும் என, 14வது நிதி ஆணையத்தின் விதிமுறைகளில் கூறப்படவில்லை.
எனவே, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவையை உடனே வழங்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-செப்-202021:00:02 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஏன்னா எலக்சனுக்குள் எதை எதை சுருட்டவேண்டுமோ சுருட்டிட பணம் திருடி ஓட்டுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு என்ன பொதுநலம் பார் அட அடா என்னே அக்கரை பணத்தின்மீது.
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
12-செப்-202013:04:35 IST Report Abuse
Uthiran இன்றய தினமலரில் வந்த மற்றொரு செய்தி.. "புதுகையில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார்" தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லாமல் விட்டது என்னவென்றால் " கணம் கோர்ட்டார் அவர்களே இன்னும் எங்களுக்கு ஆட்சி (ஊழல்) செய்வதற்கு குறுகிய காலமே உள்ளதாலும், கொரோனாவை வைத்து சம்பாதித்தாலும் எங்களது பசி இன்னும் தீராததாலும், எங்களை கட்சியினர் உள்ளாட்சி அமைப்பில் மேலும் ஆட்டையை போட்டால் தான் தேர்தலில் செலவு செய்த காசையே எடுக்க முடியும் என்ற மோசமான நிலையில் இருப்பதாலும் உள்ளாட்சி அமைப்பிற்கு வரவேண்டிய நிதியை உடனே பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்".
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
12-செப்-202012:30:53 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. பழனி துறதிறது என்று முடிவு பண்ணிட்டார் சாது மிரண்டால் காடு கொள்ளாது கதை தான் நடக்குது இப்போ பாருங்கள் சிங்கி பசங்கள் எங்கள் தலைமையில் கூட்டணி என்கிற பேச்சே காணோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X