பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் ரேஷன் கடைகள் மதுரைக்கு வருவது எப்போது

Added : செப் 12, 2020
Share
Advertisement

மதுரை : சென்னை, நெல்லைக்கு கூட்டுறவு துறை சார்பில் நடமாடும் ரேஷன் கடை திட்டம் அமலான நிலையில் அத்துறை அமைச்சர் செல்லுார் ராஜூவின் மாவட்டமான மதுரையில் இன்னும் துவங்கப்படவில்லை.

மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடியில் 3501 நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க அரசு உத்தரவிட்டது. மதுரையில் 101 கடைகள் அமையவுள்ளன. இதன் மூலம் தொலைதுாரத்தில் ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் கார்டுதாரர்கள் பயனடைவர். கொரோனா தொற்றுபரவும் நேரத்தில் மக்களின் அலைச்சல் தவிர்க்கப்படுவதால் இதுபோன்ற கடைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருக்கும்.'இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது.அமைச்சர் உத்தரவிட வேண்டும்' என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X