சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி கணக்கில் பணம் பறிப்பு: போலீஸ்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:சமூக வலைதளமான, 'பேஸ்புக்' கில், சமீப நாட்களாக, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் படங்களை பயன்படுத்தி, அவர்களின் பெயர்களில், மர்ம நபர்கள் போலி கணக்கு துவக்கி வருகின்றனர்.அதன் வாயிலாக, போலீஸ் அதிகாரிகளின் நட்பு வட்டத்தில் இருப்போருக்கு, 'பிரெண்ட்ஸ் ரெகொஸ்ட்' கொடுக்கின்றனர்.

அது ஏற்கப்பட்ட பின், 'மெசஞ்ஜர்' செயலி வாயிலாக, 'சாட்டிங்'செய்து, அவசரமாக, 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. 'கூகுல் பே'யில், உடனடியாக அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து, 'ஆட்டையை' போடுகின்றனர். போலீஸ் அதிகாரிகளின் நண்பர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொள்ளும் போது தான், இந்த நுாதன மோசடி, அவர்களின் கவனத்திற்கே செல்கிறது.

இதுபோல, தமிழக காவல் துறையில் பணிபுரியும், 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளின் படங்களை பயன்படுத்தி, பேஸ்புக் வாயிலாக, பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள் பணம் கேட்பது போல, சென்னையில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலருக்கும், மெசஞ்ஜரில் தகவல்கள் வந்துள்ளன.சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு, நில மோசடி தடுப்பு பிரிவு, முன்னாள் உதவி கமிஷனர், ராஜேந்திர குமார் மற்றும் போலீஸ்காரர் டில்லி ராஜா உள்ளிட்டோரின் படங்களை பயன்படுத்தியும், மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.அதேபோல, சென்னை, மாதவரம், போலீஸ் உதவி கமிஷனர், அருள் சந்தோஷ் முத்து பெயரிலும், மர்ம நபர்கள், பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவரும் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பெயரில், மர்ம நபர்கள் பணம் சுருட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது, காவல் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மர்ம நபர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, இதுபோன்ற மோசடி முயற்சியில் ஈடுபட்டு வருவதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X