பொது செய்தி

தமிழ்நாடு

இணையவழி பாரம்பரிய நடைபயணம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் நாளை (செப்.,13) காலை 10:00 மணிக்கு இணைய வழி பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சிறப்புகள் குறித்துவிளக்கப்பட உள்ளது. இங்கு ஒரே பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட வெட்டுவான் கோயில், சமண பள்ளிகள், கழுகாசல மூர்த்தி குடவரை கோயில் குறித்து பல தகவல்களை அறியலாம். மாலை 5:00 மணிக்கு ஆந்திரா புனிதங்கள் என்றதலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மதுரை காமராஜ்பல்கலை முன்னாள் பேராசிரியர் சேதுராமன், தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், சித்தா மருத்துவர் கணபதி பேசுகிறார்கள். நிகழ்ச்சியை அறக்கட்டளை இயக்குனர் வாசிமலை, சுற்றுலா திட்ட ஆலோசகர் பாரதி, கழுகுமலை கோயில் செயல் அலுவலர் ஒருங்கிணைக்கிறார்கள். 23769 29429 என்ற ஜூம் செயலி ஐ.டி., மூலம் பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X