பொது செய்தி

தமிழ்நாடு

'மத்திய அரசு திட்டங்களில் தமிழகத்துக்கு அதிக பயன்'

Added : செப் 12, 2020
Share
Advertisement
 'மத்திய அரசு திட்டங்களில் தமிழகத்துக்கு அதிக பயன்'

உடுமலை:''மத்திய அரசின் திட்டங்கள் மூலம், தமிழகம் அதிகம் பயன்பெற்றுள்ளது,'' என பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பா.ஜ.,வை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களில், தமிழகம் அதிகளவு பயன்பெற்றுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கான கடன் உதவி திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்ட தொழில்துறையினருக்கு அதிகளவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொப்பரைக்கான விலை, கிலோ, 46 ரூபாயாக இருந்தது. தென்னை விவசாயிகளை காக்க, தற்போது, 99.60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தேங்காய் தேக்கம் அதிகரித்த நிலையில், பா.ஜ.,சார்பில், மத்திய பிரதேசம் உள்ளிட்ட அரசுகளிடம் பேசி, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.கன்னியாகுமரி இடைத்தேர்தலில், பா.ஜ.,போட்டியிடும். தற்போதுள்ள கூட்டணி கட்சிகளுடன், சட்டசபை தேர்தலை சந்திப்போம். எத்தனை தொகுதிகள் என்பது, அப்போது முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X