கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர்:உயர் நீதிமன்றத்தில் மனு

Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:சென்னை, டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த, கலைஞர் தமிழ் பேரவையின் மாநில செயலர், பி.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, அண்ணாதுரை; சென்ட்ரல் மெட்ரோவுக்கு, எம்.ஜி.ஆர்., கோயம் பேடு மெட்ரோவுக்கு, ஜெயலலிதா பெயரை; தமிழக முதல்வர் அறிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டம் வர, முன்னாள் முதல்வர் கருணாநிதி காரணமாக இருந்தார். அவர் முதல்வராக இருந்தபோது தான், இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, குழு அமைத்தார். பின் அறிக்கை தயாராகி, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, மறைந்த முதல்வர்களின் பெயர்களை வைக்கும் போது, இந்த திட்டத்துக்கு காரணமானவரை மறந்து விடக்கூடாது. எனவே, டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, கருணாநிதியின் பெயரை அறிவிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
12-செப்-202012:11:48 IST Report Abuse
Thanu Srinivasan ராதாகிருஷ்ணனின் கூறிய்வை உண்மையாக இருக்கலாம். ஆனால் அஅவரது மனுவை நீதி மன்றம் ஏற்கவோ (admiting) அரசுக்கு அவர் கோரியபடி கருணாநிதியின் பெயரை வைக்க அறிவுறுத்தவோ கூடாது. நீதி மன்றம் அவரது கோரிக்கையை ஏற்கலாகாது
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
12-செப்-202006:28:27 IST Report Abuse
natarajan s செத்தும் கெடுத்தார் என்ற ரீதியில் தமிழனை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்களா ? தமிழ் நாட்டில் வரலாற்றில் இவர்கள் பேர்கள்தான் இருக்க வேண்டும் இவர்களுக்கு,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X