பொது செய்தி

தமிழ்நாடு

லடாக்கில் ஒரு மாதம் போலீசாருக்கு பணி

Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதியில், ஒரு மாதம் பணிபுரிய விருப்பமுள்ள போலீசார் குறித்த விபரம் பெறப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில், சென்னை, ஆவடி, திருச்சி, கோவை என, 15 இடங்களில், சிறப்பு காவல் படை என்ற, பட்டாலியன் பிரிவு செயல்படுகிறது. இங்கு, போலீசாருக்கு, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லடாக் எல்லையில், சீன ராணுவம் வாலாட்டி வரும் நிலையில், அங்கு ஒரு மாதம் பணிபுரிய விருப்பம் உள்ள, தமிழக போலீசாரிடம் இருந்து, சம்மதம் பெறப்பட்டுள்ளது.

திருச்சி, பட்டாலியன் கமான்டன்ட் பிரிவு சார்பில், 'மிகவும் அவசரம்; காலதாமதத்தை தவிர்க்கவும்' என, தங்களுக்கு கீழ் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டு உள்ளது. அதன் விபரம்:லடாக் பகுதியில், ஒரு மாதம் பணிபுரிய, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., என, ஏழு பேரை நியமனம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீசாரின் விருப்பம் அறிந்து, உடனடியாக தெரிவிக்க வேண்டும். விருப்பமில்லை என, தெரிவிக்கும் போலீசாரும், மேற்கண்ட பணிக்கு நியமனம் செய்து அனுப்பப்படுவர் என்பதும், இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appu - tampines,சிங்கப்பூர்
12-செப்-202008:56:17 IST Report Abuse
Appu எதுக்கு போய் அடி வாங்கிட்டு வரவா ?
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
12-செப்-202005:50:43 IST Report Abuse
NARAYANAN.V லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரர்களுக்குத் தண்டனை வழங்க இது சரியான தருணம்.அப்படிப்பட்டவர்களையெல்லாம் இப்போது லடாக்கிற்கு அனுப்பி வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X