சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து அதிகாரி வீட்டில் போலீசார், 'ரெய்டு'

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஜெ.ஜெ.நகர்:தி.மு.க. எம்.எல்.ஏ., மீது தொடரப்பட்ட மோசடி வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போக்குவரத்து துறை அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி.இவர், 2011 -- 2015 வரை, அ.தி.மு.க., அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 2015ல், வேலை வாங்கி தருவதாக, 81 பேரிடம், 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் மீது, வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, முகப்பேர், ஜீவன் பீமா நகரில் உள்ள, போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று காலை, 11:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை சோதனை நடத்தினர், இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X