சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ.75.80 லட்சம் வசூல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை மாவட்டத்தில் பிரதமர் வேளாண் உதவித்தொகை திட்ட மோசடியில் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து நேற்று மாலை வரை ரூ.75.80 லட்சம் வசூலிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும் வேளாண் துணை இயக்குனர்கள் தலைமையிலான குழுவினர் மோசடி விவசாயிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். தகுதியற்ற 11,135 பேர்களின் வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் ஜீரோ பாலன்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற சில வழிகாட்டுதல்களை வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தனுக்கு கலெக்டர் வினய் வழங்கியுள்ளார்.

அதன்படி இன்று (செப்., 12) முதல் வங்கி கணக்கில் பணம் இல்லாதவர்களை விசாரணை குழுவினர் தொடர்பு கொண்டு வசூலிக்கவுள்ளனர். மேலும் மோசடிக்கு காரணமானவர்கள் பட்டியலும் தயாராகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X