பொது செய்தி

தமிழ்நாடு

4.39 லட்சம் பேர்

Added : செப் 12, 2020
Share
Advertisement

நகர், புறநகரில் ஜூன் இறுதிக்கு பின்னர் கொரோனா அசுர வேகமெடுத்தது. மொத்த பாதிப்பில் 80 சதவீதம் மாநகராட்சி பகுதியில் பதிவானது. இதை தடுக்க பரிசோதனை எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டது. நகரில் மட்டும் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதிக்கப்பட்டனர். அதன் பின்னரே வைரஸ் கட்டுக்குள் வந்தது.பரிசோதனையை அதிகரிக்கவும் அறிகுறியுள்ளோரை அடையாளம் காணவும் மாநகராட்சிக்கு பெரிதும் உதவியது காய்ச்சல் முகாம். இதனால் தினசரி பாதிப்பு 250ல் இருந்து 40-50 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து முகாம்கள் நடக்கின்றன.

நகர் நல அலுவலர் குமரகுருபரன் கூறியதாவது:கொரோனாவை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க காய்ச்சல் முகாம்கள் பெரிதும் உதவுகின்றன. சரியான நபர்களை பரிசோதிப்பதன் மூலம் பரவல் வேகமாக கட்டுப்படுகிறது. இதுவரை 8802 முகாம்கள் நடத்தியுள்ளோம். 4,39,797 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் சாதாரண சளி, காய்ச்சல் அறிகுறி தென்பட்ட 82,458 பேரைஅடையாளம் கண்டு, சந்தேகத்தின் பேரில் 78,493 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் 3685 கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளோம். அறிகுறி இருப்பவர்கள் முகாம்களில் பங்கேற்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X