பொது செய்தி

தமிழ்நாடு

தாட்கோ திட்டங்களில் பயன்பெறலாம்: கலெக்டர்

Added : செப் 12, 2020
Share
Advertisement

மதுரை, : மதுரை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதார மேம்பாடுக்காக தாட்கோ திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: 18 முதல் 65 வயதிற்குட்பட்ட ஆண்டு குடும்ப வருவாய் ரூ.ஒரு கோடி வரையுள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். நிலம் வாங்க மற்றும் மேம்படுத்த, பால் பண்ணை, கறவை மாடுகள் வளர்ப்பு, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் துவங்க இதில் வழிவகையுண்டு. ஆதிதிராவிடர்இனத்தவர் application.tahdco.com, பழங்குடியினர் fast.tahdco.com இணையதளங்களில் தேவையான சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை வளாகத்திலுள்ள தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X