கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி:கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர், மின்சாரம் தாக்கி இறந்தனர்.

புதுச்சேரி மாநிலம், காட்டேரிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 35; சிமென்ட் கலவை இயந்திரம் வைத்து, தொழில் செய்து வந்தார்.இவர், நேற்று காலை காட்டேரிக்குப்பம் அம்மன் நகரைச் சேர்ந்த, ஆசிரியர் மகேந்திரன் என்பவர் கட்டும் வீட்டில், மூன்றாம் தளத்தில் ஜல்லி போடும் பணியில் ஈடுபட்டார். அவருடன் நவீன்குமார், 24, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

காலை, 11:00 மணியளவில், ஜல்லி போடும் பணி முடிந்து, மற்ற தொழிலாளர்கள் கீழே இறங்கினர். செல்வகுமார் மற்றும் நவீன்குமார், கலவையை மேலே கொண்டு செல்ல பயன்படுத்திய லிப்ட்டில் இருந்த இரும்பு ரோப்பை கழற்றினர்.அப்போது, சாலையோரம் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் ரோப் விழுந்தது.

இதில், செல்வகுமார், நவீன்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. செல்வகுமார், மூன்றாவது மாடியில் இருந்து துாக்கி வீசப்பட்டு இறந்தார்.மயங்கி கிடந்த நவீன்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X